தமிழ்நாடு – மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்!

Published On:

| By indhu

Parliamentary Elections in Tamil Nadu: Here is the 11 o'clock situation!

இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 23.72 சதவீத வாக்குகள் பதிவாயுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையில், 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், அடுத்ததாக 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 23.72 சதவீத வாக்குகள் தற்போது வரையில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளும் 11 மணிக்கு பதிவான வாக்குகளின் நிலவரம் பின்வருமாறு,

  1. கள்ளக்குறிச்சி – 26.58%
  2. திண்டுக்கல் – 26.34%
  3. நாமக்கல் – 26.07%
  4. கரூர் – 26.07%
  5. சேலம் – 25.97%
  6. விழுப்புரம் – 25.69%
  7. தருமபுரி – 25.66%
  8. பெரம்பலூர் – 25.62%
  9. ஆரணி – 25.53%
  10. திருப்பூர் -25.47%
  11. விருதுநகர் – 25.39%
  12. ஈரோடு – 25.37%
  13. சிதம்பரம் – 25.35%
  14. பொள்ளாச்சி – 25.02%
  15. தேனி – 24.99%
  16. தஞ்சாவூர் – 24.96%
  17. திருவள்ளூர் – 24.93%
  18. திருவண்ணாமலை – 24.92%
  19. நாகப்பட்டினம் – 24.92%
  20. கிருஷ்ணகிரி – 24.82%
  21. வேலூர் – 24.67%
  22. கடலூர் – 24.66%
  23. காஞ்சிபுரம் – 24.65%
  24. கோயம்புத்தூர் – 24.54%
  25. தென்காசி – 24.51%
  26. சிவகங்கை – 24.47%
  27. தூத்துக்குடி – 24.16%
  28. கன்னியாகுமரி – 24.68%
  29. மயிலாடுதுறை – 24.76%
  30. அரக்கோணம் – 24.74%
  31. திருச்சிராப்பள்ளி 24.07%
  32. நீலகிரி – 24.00%
  33. ராமநாதபுரம் – 23.89%
  34. திருநெல்வேலி – 23.78%
  35. ஸ்ரீபெரும்புதூர் – 23.53%
  36. மதுரை – 22.73%
  37. வடசென்னை – 22.05%
  38.  தென்சென்னை – 21.97%
  39. மத்திய சென்னை – 20.09%

Parliamentary Elections in Tamil Nadu: Here is the 11 o'clock situation!

மேலும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் தேர்தலில் 11 மணி நிலவரப்படி, 17.09 சதவீத் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: திருமா வலியுறுத்தல்!

ஊழியர்களை நீக்கியது கூகுள்… ஏன் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel