மதுரை மாட்டுத்தாவணி: எந்த வசதியும் இல்லாமல் கட்டணம் மட்டும் வசூல்!

தமிழகம்

மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு வரும் சைக்கிள் முதல் லாரி வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வாகனங்களை நிறுத்துவதற்கு எந்த ஒரு வசதியும் செய்யப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து  பேசியுள்ள மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர்கள், “மாட்டுத்தாவணி காய்கறி சந்தையின் நுழைவாயிலிலேயே மாநகராட்சியால் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வாகனங்களை நிறுந்த எந்த வசதியும் செய்யப்படாததால், அனைத்து வாகனங்களும் ஒழுங்கற்ற முறையில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.

வார இறுதி நாளில் வாகனங்கள் இரட்டை வரிசையில் நிறுத்தப்படுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மேலும் இங்கு மழைநீர் வெளியேற வழியில்லாததால் மழைக் காலங்களில் சந்தை முழுவதும் சேறும், சகதியுமாகி விடுகிறது. கட்டண ரசீதில் ‘திறந்தவெளியில் நிறுத்தும் வாகன கட்டணம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தை வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் அடிக்கடி வாகனங்கள் திருடு போகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தால் போலீஸார் வழக்கு பதிவு செய்வதில்லை. அதனால், காய்கறி சந்தையில் திருடுபோகும் வாகனங்கள் விவரம் வெளிச்சத்துக்கு வருவதில்லை. மாநகராட்சி நிர்வாகம், சந்தையில் வாகனக் காப்பகம் அமைக்காமலேயே கட்டணம் வசூலிப்பது தவறு. கட்டணம் வசூலித்தால் வாகனங்களைப் பாதுகாப்பதும் கடமையல்லவா” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்து, இங்குள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: வேக்ஸிங் செய்ய போறிங்களா… இந்த விஷயங்களை மறக்காதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: இறால் வடை

டிஜிட்டல் திண்ணை: தேதிகுறித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்…பீதியில் அமைச்சர்கள்!

+1
0
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *