‘பொணமா பாக்கவா அனுப்பி வச்சேன்’: கதறும் ஸ்ரீமதி தாய்

தமிழகம்

இன்று (ஜூலை 23 ) மாலை மாணவி ஸ்ரீமதியின் இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்த மாணவியின் உடல் 10 நாட்களுக்கு பிறகு இன்று அவரது பெற்றோரிடம் மத்திய மண்டல ஜஜி சந்தோஷ்குமார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகு தனது பிள்ளையின் உடலை பார்த்து அவரது தாய் செல்வி கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை உருகச் செய்தது.

“படிக்கத்தான அனுப்பி வச்சேன். இப்போ பொணமா பாக்குறேனே”னு ஸ்ரீமதியின் அம்மா நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறுவதை பார்த்து அருகிலிருந்தவர்களும் கண்கலங்கினர்.

தொடர்ந்து, மாணவியின் உடலுக்கு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத், காவல் துறையினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மருத்துவமனை வளாகத்திலேயே இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அமைச்சர் சி.வி.கணேசன் காரிலேயே மாணவியின் பெற்றோர்கள் சொந்த ஊரை நோக்கி பயணிக்கின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *