சென்னையில் இன்று கனமழையா? – பிரதீப் ஜான் லேட்டஸ்ட் அப்டேட்!

Published On:

| By Selvam

சென்னையில் இன்றும் நாளையும் (டிசம்பர் 11,12) கனழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை வடக்கு-  மன்னார் வளைகுடா – தென் தமிழ்நாடு – கேரளா வழியாக நகரக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக உருவாக வாய்ப்பில்லை.

மன்னார் வளைகுடா வழியாக கேரளாவிற்கு செல்லும் இந்த வழித்தடமானது தமிழகத்திற்கு எப்போதும் நல்ல மழைப்பொழிவைக் கொடுக்கும்.

இதன்காரணமாக, தமிழகத்தின் உள் பகுதிகள், மேற்கு தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை எப்படி இருக்கும்?

சென்னையைப் பொறுத்தவரை இன்று (டிசம்பர் 11) மாலை அல்லது இரவில் மழை தீவிரமடையும். இன்றும் நாளையும் கனமழை பெய்யும். ஆனால், அதி கனமழை இருக்காது.

புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

டெல்டாவில் அதி கனமழை!

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும்.

அடுத்த 3 நாட்களுக்கு கொடைக்கானல் மற்றும் குன்னூர் பகுதிகளுக்கு பயணம் செய்வதை பயணிகள் தவிர்க்க வேண்டும்.

உள் மற்றும் மேற்கு தமிழகம்

கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல். கொடைக்கானல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.

தென் தமிழகம்

மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 2 – 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். தூத்துக்குடி நெல்லை, குமரி தென்பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பைக் டாக்ஸிகளுக்கு சிக்கல்… போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!

டாப் 10 நியூஸ்: ஸ்டாலின் கேரளா பயணம் முதல் 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel