குடியரசு தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று (ஜனவரி 23) முதல் ஜனவரி 26-ம் தேதி வரை பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், வணிக வளாகங்கள் உட்பட மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகள் ஜனவரி 26ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், செய்தித்தாள்கள், இதழ்கள் செல்ல தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
ஆதார் இணைப்பு: இலவச மின்சார திட்டம் ரத்து ஆகுமா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!