ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான சதீஷ் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவி கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.
காதல் விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார். மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் சத்யாவின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். உடல்நலக் குறைவு காரணமாக சத்யாவின் தாயும் உயிரிழந்தார்.
இதற்கிடையே சத்யாவை ரயில் வரும் போது தண்டவாளத்தில் தள்ளிவிட்ட சதீஷை போலீசார் 2022 அக்டோபர் 14ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், 11.1.2023 அன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், வழக்கில் 27ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி, கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொன்ற வழக்கு இன்று (டிசம்பர் 27) விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் கைதான சதீஷ் குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
மேலும் சதீஷுக்கான தண்டனை விவரம் வரும் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அண்ணாமலை சாட்டையடி போராட்டம்… பாஜகவினரே ஏற்க மாட்டார்கள் – ஆர்.எஸ்.பாரதி