paneer soft Paratha

கிச்சன் கீர்த்தனா: பனீர் ஸ்டஃப்டு பராத்தா

தமிழகம்

வீக் எண்டு என்றாலே வெளியே போய் தான் சாப்பிட வேண்டும் என்பது சில குடும்பங்களின் எழுதப்படாத விதி. ‘ஒரே மாதிரி சாப்பிட்டு போரடிக்குதுல்ல… ஒரு மாறுதலுக்கு புது டேஸ்ட்டுக்காக ரெஸ்டாரன்ட்டை தேடிப் போறோம்’ என்பது அவர்களது பதிலாகவும் இருக்கும். ரெஸ்டாரன்ட்டில் கிடைக்கும் அதே புதுவித சுவை உங்கள் வீட்டு கிச்சனிலும் சாத்தியம். இந்த வார வீக் எண்டை வீட்டிலேயே கொண்டாட இந்த பனீர் ஸ்டஃப்டு பராத்தா ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?
துருவிய பனீர் – 100 கிராம்
கோதுமை மாவு – 300 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 50 மில்லி
தண்ணீர் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து 15 நிமிடங்கள் துணியால் மூடி வைக்கவும்.

ஒரு பவுலில் துருவிய பனீர், வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். கோதுமை மாவை சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையில் வைத்து சமன்படுத்தி, இதில் சிறிதளவு பனீர் கலவையை வைத்து மூட வேண்டும்.

பிறகு மாவை சப்பாத்திக்குத் தேய்ப்பது போல தேய்த்து தோசைக்கல்லில் நெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால், பனீர் ஸ்டஃப்டு பராத்தா தயார். பராத்தாவை பனீர் பட்டர் மசாலா அல்லது பச்சைப் பட்டாணி மசாலாவுடன் பரிமாறவும்.

கூண்டை விட்டு கிளி வந்தது…கோவில்பட்டியில் அண்ணாமலை சூசகம்!

முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும்: சூரி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0