இந்த வீக் எண்ட் நாளில் ரிலாக்ஸாக, சுவையாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், மைதாவுக்கு மாற்றாக கோதுமையால் இந்த பனீர் சீஸ் கோதுமை பரோட்டா செய்து பார்த்து சுவைக்கலாம். வீக் எண்டை கொண்டாடலாம்.
என்ன தேவை?
கோதுமை மாவு – ஒரு கப்
பனீர் துருவல் – ஒரு கப்
சீஸ் துருவல் – ஒரு கப்
ஓரிகானோ – ஒரு டீஸ்பூன்
உலர்ந்த பேசில் இலைகள் (Basil Leaves) – அரை டீஸ்பூன்
மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – 25 கிராம்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு கிண்ணத்தில் சீஸ், பனீர், ஓரிகானோ, பேசில் இலைகள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து கலந்துகொள்ளவும்.
மாவைச் சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் வட்டமாகத் தேய்க்கவும். இதில் பனீர் – சீஸ் கலவையைச் சேர்த்து அதை நான்கு புறமும் மடித்து வட்டவடிவில் தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு வெண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.