ஊராட்சி மன்ற தலைவர்கள் பச்சை மையினால் கையெழுத்திட அதிகாரம் இல்லை என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சபரிகிரீஸ்வரன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பச்சை நிற மையால் கையெழுத்திடும் அதிகாரம் உள்ளதா? தகுதி உள்ள நபர்கள் குறித்த தகுதி தேவை. கிராம ஊராட்சித் தலைவர்கள் பச்சை நிற மையால் கையெழுத்திடலாமா?
உள்ளாட்சி பிரதிநிதிகள் பச்சை நிற மையினை பயன்படுத்தலாம் என ஏதேனும் அரசாணை உள்ளதா? அப்படி உள்ளது என்றால் அதன் நகல் வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர் பச்சை நிற மையால் கையெழுத்திட்டால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்கக உதவி இயக்குநர் பதில் அளித்துள்ளார்.
அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பச்சை நிற மையினால் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை . அப்படிக் கையெழுத்திட்டால் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
குஜராத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் அமுல் பால் விலை உயர்வு!