பார்த்த உடன் வாயூற செய்வது பஞ்சாமிர்தம். அவற்றில் பழநி பஞ்சாமிர்தம் புகழ்பெற்றது. இந்த பஞ்சாமிர்தத்தை வீட்டிலேயே செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
கறுப்பு திராட்சைப்பழம் – 100 கிராம்
வாழைப்பழம் – 6
கொய்யாப்பழம் – பாதி
நறுக்கிய பேரீச்சை – 100 கிராம்
கல்கண்டு – 100 கிராம்
தேன் – 100 மில்லி
நெய் – 100 மில்லி
ஏலக்காய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரைப்பாகு – 250 மில்லி
சுக்குத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
திராட்சை, கொய்யா மற்றும் வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு ஓரளவுக்குப் பிசைந்து கொள்ளவும். இதில் மீதமுள்ள பொருட்கள் அனைத்தையும் இதில் சேர்த்துக் கிளறி நெய்யை உருக்கிச் சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் வைத்துப் பரிமாறவும். சாப்பிடும்போது பழத்துண்டுகள் கடிபடுவதுதான் இதன் சிறப்பே.