தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி!

தமிழகம்

தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையான இன்று (ஏப்ரல் 2) அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.

ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது.

இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை குருத்தோலை திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று (ஏப்ரல் 2) குருத்தோலை பவனி அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்றது.

குறிப்பாகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலில் ஏராளமான பக்தர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி பவனியில் கலந்து கொண்டனர்.

palm sunday parade in all churches

இதனைத் தொடர்ந்து, இந்த புனித வாரத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி புனித வியாழனாக கடைப்பிடிக்கப்படுகிறது. மறுநாள் புனித வெள்ளி திருநாளன்று முழு நாளும் நற்கருணை ஆராதனை நடைபெறும். ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று இரவு 11 மணிக்கு திருவிழிப்பு வழிபாடு நடைபெறும்.

அதன் பின்னர் ஏப்ரல் 9 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும்.

மோனிஷா

பொதுச்செயலாளரான எடப்பாடி: முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சம்மர் சீசன்: மேட்டுப்பாளையம் – ஊட்டி சிறப்பு ரயில்!

ஐபிஎல் 2023… மிரட்டிய மார்க் வுட்: அடிபணிந்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0