Pallavan Express train cancelled

பல்லவன் விரைவு ரயில் மார்ச் 4 வரை ரத்து!

தமிழகம்

பல்லவன் விரைவு ரயில் இன்று முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை சென்னை – காரைக்குடி, காரைக்குடி – சென்னை இடையே இருமார்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை – திருமங்கலம் இடையே இரு வழி ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் பல்வேறு விரைவு ரயில்கள் மாற்று வழியில் இயங்கும் என்றும் சில ரயில்களை தற்காலிகமாக நிறுத்தம் செய்தும் தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதில் பல்லவன் அதிவிரைவு ரயில் 9 நாட்கள்  தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வண்டி எண் 12605 சென்னை To காரைக்குடி வரும் “பல்லவன் விரைவு ரயில் ” பிப்ரவரி-16, 17, 20, 21,23, 24,27, 28 மார்ச் 3 ஆகிய 9 நாட்களில் தற்காலிகமாக  இயங்காது என்றும்

அதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 12606 காரைக்குடி To சென்னைக்கு பிப்ரவரி-17, 18,21,22,24,25, 28 மார்ச் 1,4 ஆகிய நாட்களில் தற்காலிமாக இயங்காது என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

கலை.ரா

ஆற்றில் மூழ்கி மாணவிகள் பலியான விவகாரம்: ஆசிரியர் கைது!

பிபிசி அலுவலகங்கள்: மூன்றாவது நாளாக சோதனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *