பல்லடம் அருகே 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் இன்று (செப்டம்பர் 5) கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்தியதை தட்டி கேட்டதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கண் இமைக்கும் நேரத்தில் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
அரிவாளால் வெட்டியதில் அவர்களது கைகள், கால்கள் தனித்தனியாக வீசப்பட்டன. கண் இமைக்கும் நேரத்தில் 4 பேரையும் வெட்டி சாய்த்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இந்த கொடூர கொலையை செய்த குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று குற்றவாளிகளான செல்லமுத்து மற்றும் சோனை முத்தையா கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வெங்கடேசன் என்பவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி உட்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வெங்கடேசனின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பத்தல் மேடு கிராமத்திலும் நேற்று இரவு தனிப்படை போலீஸ் வருகை தந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் வெங்கடேசனின் செல்போன் எண்ணை வைத்துக் கொண்டு அவர் இருக்கும் இடத்தை நெருங்கி விட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று முக்கிய குற்றவாளியான வெங்கடேஷை திருச்சி முக்கொம்பு அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மோனிஷா
முத்தையா முரளிதரன் பயோ பிக்: டிரெய்லரை வெளியிடும் சச்சின்
7 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடங்கியது!