கோவை உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தில் பாலஸ்தீன தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ்க்கும் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கிய போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
எனினும் ராணுவ பலமும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவும் பெற்றுள்ள இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் வசித்து வரும் காசா நகரத்தை தரைமட்டமாக்கும் தாக்குதலை தொடுத்து வருகிறது.
மேலும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் போர் விதிகளை மீறிய தாக்குதலால் இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட 6,546 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் இனபடுகொலை தாக்குதல் செய்து வருவதாக துருக்கி, எகிப்து, ஈரான், கத்தார், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பல்வேறு உலக நாடுகளில் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து கண்டன போராட்டமும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
அதன்படி தமிழ்நாட்டில் கோவை உக்கடம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக்கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் மற்றும் பேரணி நடத்தி கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது கோவை உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.
இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொடிய அகற்றிய கோவை உக்கடம் காவல்நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதன்படி பாலஸ்தீனக் கொடியை பாலத்தில் பறக்கவிட்டதாக ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பை சேர்ந்த சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாஹிர், ரபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நெதர்லாந்துக்கு நெத்தியடி… ’1999’ வரலாற்றை மீண்டும் உருவாக்கும் ஆஸ்திரேலியா!
வேலைவாய்ப்பு : TNUIFSL நிறுவனத்தில் பணி!
இஸ்ரேல் – ஹமாஸ் போர்: சர்ச்சையை கிளப்பிய கங்கனா ரனாவத்
பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்வு – எது நார்மல்… எது அப்நார்மல்?