திருப்பத்தூர் மாவட்டம் மாராபட்டு பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் நுரை ததும்பி துர்நாற்றம் வீசுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை முதல் நேற்று இரவு வரை பெய்த கனமழையால் மாராபட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அருகாமையில் செயல்பட்டுவரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் பாலாற்று நீர் முழுவதும் நுரை ததும்பி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது .
இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த மாதம் இதேபோல் ஆற்று நீரில் நுரை ததும்பி சென்றபோது மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றில் கழிவுநீரை திறந்து விடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் ஆற்றில் கழிவுநீரை திறந்துவிட்டிருப்பது அந்தப் பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ஃபேஷியல் செய்வது உண்மையிலேயே பலனளிக்குமா?
கிச்சன் கீர்த்தனா: பனீர் சீஸ் பால்ஸ்!
தலைவன் வடை, தொண்டன் முறுக்கு: அப்டேட் குமாரு
காசா மீது அணுகுண்டு? இஸ்ரேலிய அமைச்சர் சர்ச்சை!