Palani Vaikasi Visakam Festival

பழனி: வைகாசி விசாக திருவிழா நாளை கொடியேற்றம்!

தமிழகம்

அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. சிறப்பு வாய்ந்த இந்தத் திருவிழா, பழனி முருகன் கோயிலில் நாளை (மே 27) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடி பட பூஜை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி – தெய்வானை திரு உலாவும்,

இரவில் வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

விழாவின் 6ஆம் நாளான ஜூன் 1ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் திரு உலாவும் நடைபெறுகிறது.

7ஆம் நாளான ஜூன் 2ஆம் தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோயிலில், முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதையடுத்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.

பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10ஆம் தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

இந்தத் திருவிழாவுக்காக தமிழகம் முழுவதிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு பச்சடி!

“ஒரு மாசமா கரண்ட் இல்ல”: இரவில் மக்கள் சாலை மறியல்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *