களைகட்டும் பழனி கோவில்: இன்று மாலை தேரோட்டம்!
பழனி முருகன் கோவிலில் இன்று (பிப்ரவரி 4) தைப்பூச திருவிழா பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரக்கூடிய நாளில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த தைப்பூச திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று அதிகாலை முதலே பக்தர்கள் மேள தாளத்துடன் கிரிவலம் வந்து மலையின் மீது சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று மாலை 4.30 மணிக்கு நான்கு ரத வீதிகளில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பக்தர்கள் கூட்ட நெரிசலால் படிப்பாதையானது ஒரு வழிப்பாதையாக போலீசாரால் மாற்றப்பட்டது. பக்தர்கள் யானை பாதை வழியாக மலை மீது சென்று சாமி தரிசனம் செய்யவும், சாமி தரிசனம் செய்த பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்குவதற்காக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
செல்வம்
டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க!
ஈரோட்டில் எடப்பாடி அவசர ஆலோசனை! பொதுக்குழு நடத்த சாத்தியம் உண்டா?