பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலாகர்சன வைபவ பூஜை இன்று (ஜனவரி 23) நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று கோவிலின் அனைத்து பிரகாரங்களையும் இணைத்து சக்தி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

பழனிக்கு செல்லும் கோவிலில் 696 படிப்பாறைகள் உள்ளது. இங்கு 86 உப கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கும்பாபிஷேக புனித நீர் பூஜிக்கப்பட்டு யாக சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு யாக பூஜை நடைபெற உள்ளது. மாலை 3 மணிக்கு நவபாசாண மூலவர் சன்னதியில் உள்ள முருகன் சிலை மூடப்படுகிறது. வரும் ஜனவரி 27-ஆம் தேதி வரை முருகன் சிலையை பக்தர்கள் தரிசிக்க முடியாது.
ஜனவரி 27-ஆம் தேதி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றவுடன் தீபாராதனை காட்டப்பட்டு மூலவர் சன்னதி திறக்கப்படும். அதற்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக முருகன் சிலை திறக்கப்படும்.
செல்வம்
டெல்லி செல்லும் ரயில்களில் பார்சல் சேவை நிறுத்தம்!
ஆதார் இணைப்பு: இலவச மின்சார திட்டம் ரத்து ஆகுமா?