palani murugan temple board madras court

இந்துக்களுக்கு மட்டும் அனுமதி: பதாகையை மீண்டும் வைக்க உத்தரவு!

தமிழகம்

பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி என்று வைக்கப்பட்ட பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பழனியை சேர்ந்த செந்தில் குமார் சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி, இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் கோவிலுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது.

அதன்படி தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும், மாற்று மதத்தை நம்புகிறவர்களும் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை.

இந்தசூழலில் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது.  தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும். பதாகை அகற்றப்பட்டதை தொடர்ந்து இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். எனவே பழனி முருகன் கோவில் தேவஸ்தானத்திற்குட்பட்ட பழனி முருகன் கோவில் மற்றும் உப கோவில்களில் இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆஜராகி, “இந்து அறநிலையத்துறை சட்டம் 1947- விதிப்படி இந்து அல்லாதவர்கள் இந்து கோவிலுக்குள் நுழைய தடை விதிப்பதற்கான ஆணை தெளிவாக உள்ளது. பழனி முருகன் கோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் நிறுவ வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, “இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகை ஏன் அகற்றப்பட்டது” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து “இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் அதே இடத்தில் அதிகாரிகள் வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

செல்வம்

தென் மாவட்ட அரசியல் படத்தில் செல்வராகவன்

மூன்று ஆண்டுகளில் மாயமான 13.13 லட்சம் பெண்கள்… காரணம் என்ன?

எம்ஜிஆர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை பிறர் செயல்படுத்த முடியாது: அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் பதில்!

மணிப்பூர் விவகாரம்: விதி 267-க்கு பதிலாக 176 கொண்டு வரும் பாஜக… எதிர்க்கட்சிகள் அமளி!

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “இந்துக்களுக்கு மட்டும் அனுமதி: பதாகையை மீண்டும் வைக்க உத்தரவு!

  1. தொடர்ந்த இடத்தில் நின்று தான் ஆகனும் உலகம்..

Comments are closed.