ரசங்களில் பல ரகங்கள். அவற்றில் ஒன்றுதான் சத்தான இந்த பாலக் ரசம். ரசம் வேண்டாம் என்று வெறுப்பவர்கள்கூட இந்த ரசத்தை விரும்பி சாப்பிடுவார்கள். Palak Rasam Recipe in Tamil
என்ன தேவை? Palak Rasam Recipe in Tamil
பாலக் – ஒரு கட்டு
புளி – 100 கிராம்
சீரகம், பூண்டு – தலா 25 கிராம்
மிளகு – 40 கிராம்
தக்காளி – 3
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் – தேவையான அளவு
எண்ணெய் – 50 மில்லி
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தாளிப்பதற்காக சிறிதளவு சீரகத்தை தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள சீரகம், மிளகு, பூண்டு மூன்றையும் இடித்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும். பாலக், தக்காளியை நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி.. காய்ந்த மிளகாய், சிறிதளவு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, இடித்து வைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய பாலக், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மேலும் வதக்கவும். தேவையான அளவு புளிக் கரைசல் ஊற்றி, மஞ்சள்தூள், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து, தண்ணீர் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்கும் முன் இறக்கிப் பரிமாறவும்.