254 பேராசிரியர்கள் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழகம்

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 254 பேராசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் தமிழ்நாட்டில் 6 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த அறக்கட்டளையில் கடந்த அதிமுக ஆட்சியில் பேராசிரியர் பணிக்குத் தகுதி இல்லாமல், உரியச் சான்றிதழ் இல்லாமல் பணம் பெற்றுக்கொண்டு 254 பேருக்குப் பேராசிரியர் பணிகள் வழங்கியதாகக் குற்றம்சாட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். சுப்பிரமணியம் ”தகுதியற்ற பேராசிரியர்களை நியமித்தால் பாதிக்கப்படப்போவது மாணவர்கள்தான். நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் தகுதியைச் சரிபார்க்க வேண்டும்.

மேலும், இது தொடர்பாகத் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கல்லூரி கல்வி இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (நவம்பர் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கல்லூரி கல்வி இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த அறிக்கையில் பேராசிரியர்கள் நியமனத்தில் மோசடிகள் இருப்பது தெரிய வந்தது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் பச்சையப்பன் கல்லூரியில் தற்போது பணியாற்றி வரும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, “இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்று பேராசிரியர்கள் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.

மோனிஷா

அண்ணாமலைக்கு வரவேற்பு: ரயிலை காக்கவைத்த பாஜகவினர்!

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0