முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வுக்கான அரசாணை இன்று (ஜூலை 19) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஏப்ரல் 27 ஆம் தேதி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழகத்தில் சிறைத்துறையில் பணியாற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பின்படி தமிழக சிறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கான மிகைநேர பணிக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக இன்று (ஜூலை 19) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “சிறைத்துறையில் பணியாற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் காவல் துறை காவலர்களுக்கு ரூ.200 ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.3.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
கூடுதலாக ரூ.10 வசூலித்தால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!