கோடை விடுமுறைக்கு முன்பாகவே சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் (மார்ச்) மட்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 17,31,770 பேர் பயணம் செய்துள்ளனர்.
கொரோனாவுக்குப் பின்னர் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கணக்கிட்டு தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக தற்போது ஒருங்கிணைந்த புதிய முனையம் கட்டப்பட்டு வருகிறது.
இதன் முதல்கட்ட பணி முடிந்ததையடுத்து புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டிடத்தை கடந்த 8ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில் 108 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோடை விடுமுறை தொடங்கியதையடுத்து தற்போது சென்னையில் இருந்து வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த மாதம் (மார்ச்) மட்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 17,31,770 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதில் உள்நாட்டு பயணமாக 12,89,995 பேரும், வெளிநாட்டு பயணமாக 4,41,775 பேரும் சென்று உள்ளனர்.
மேலும் கடந்த மாதத்தில் 9,413 உள்நாட்டு விமானங்களும், 2,609 வெளிநாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு இருப்பதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
வருகின்ற கோடை விடுமுறை காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ள நிலையில் விமானக் கட்டணங்களும் வேகமாக உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா: இழுபறிக்குப் பின் பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!