சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு அதிகமான ஆவணங்கள் பதிவுக்கு வரும் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை (செப்டம்பர் 6) கூடுதல் டோக்கன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் முடிந்து வரும் ஆவணியில் சுப முகூர்த்த தினங்கள் மக்கள் மத்தியில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்த நாட்களில் பத்திரப்பதிவு செய்யும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகமான ஆவணங்கள் பதிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் வளர்பிறையில் சுபமுகூர்த்த தினம் வருவதால் சொத்துக்கள் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்ய முன்வருவார்கள் என்பதால் நாளை பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன்படி ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதில் 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கோட் முதல்நாள் வசூல் : கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த இந்தி!
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம்? : கமிஷனர் அருண்