தமிழ்நாட்டில் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
நீண்ட காலமாக தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 1,500 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் அவற்றில் 1,000 பணியிடங்களை நிரப்ப அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது கூடுதலாக 500 காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி காலியாக உள்ள பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடியாக நிரப்ப பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான காலிப்பணியிடங்கள் இருப்பதால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களை முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்திட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பாஜகவின் நோக்கமே இதுதான் : ED சம்மன் குறித்து கெஜ்ரிவால் பேட்டி!
விவசாயிகளுக்கு சாதி பெயரில் சம்மன்: வழக்கை கைவிட்ட அமலாக்கத்துறை- நடந்தது என்ன?