மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.
இந்த உரிமைத் தொகையை பெறுவதற்கான பொருளாதார தகுதிகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. தொடர்ந்து 13 கேள்விகளும் உறுதிமொழிகளும் அடங்கிய மாதிரி விண்ணப்பத்தையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான 46 பக்கம் கொண்ட அரசாணையை தமிழக அரசு நேற்று (ஜூலை 10) இரவு வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் உரிமைத் தொகையின் நோக்கம், திட்டத்தை செயல்படுத்தும் முறை, உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகள், உரிமைத் தொகை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது, வழிகாட்டு நெறிமுறைகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதற்கான நெறிமுறைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இதில் குறிப்பாக 2023 – 24 ஆம் நிதியாண்டில் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த ரூ.7,000 கோடி நிதிக்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
மோனிஷா
கோயிலைச் சுற்றி தீண்டாமை வேலி: பிடுங்கியெறிந்ததால் பரபரப்பு!
சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்குக் கூடுதல் விமானங்கள்!