மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. காரைக்காலுக்கு 200 கி.மீ தொலைவிலும் சென்னைக்குத் தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
மேலும் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து புயலின் தீவிரத்தையும் வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்யும் என்றும் வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 9) செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை சேதம்!
சென்னையில் நாளை ரேஷன் அட்டை குறைதீர் முகாம் நடக்குமா?