தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 21) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நேற்று அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 44 செ.மீ மழையும் குறைந்தபட்சமாகக் கன்னியாகுமரியில் 1 செ.மீ மழையும் பதிவானது. சென்னையை பொறுத்த வரை குளிர்ந்த வானிலையே நீடித்தது.
அதிகபட்ச வெப்பநிலையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 31.1° செல்சியஸும், குறைந்தபட்சமாக வெப்பநிலையாக ஈரோட்டில் 17.5° செல்சியஸும் பதிவானது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“21-11-2024: நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
22-11-2024 முதல் 24-11-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
21-11-2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
21-11-2024: தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் ” என்று கூறப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிட்டாரிஸ்ட் மோகினி தே குறித்து சாயிரா பானு வழக்கறிஞர் சொன்ன தகவல்!
சிபிஐ விசாரணை : எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!
பழனி முருகன் கோவிலில் திருமா தரிசனம்… ஸ்படிக மாலை அணிவித்த போகர் ஆதீனம்