தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா பகுதிகளில் இன்று (அக்டோபர் 29) வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று (அக்டோபர் 29) வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் இன்று தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 12 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவித்தது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வடதமிழக பகுதிகளில் மிகக் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக நெல்லூர் முதல் கடலூர் வரை உள்ள மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஆகையால் நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் வட தமிழ்நாடு மற்றும் தென் கடலோர ஆந்திர பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பிறகு மழையின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து பின்னர் மீண்டும் அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
T20 Worldcup 2022 : நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பு!
ரஜினியை சந்தித்த ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி