2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம்

தமிழகம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 1) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் இன்று (ஜூலை 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (ஜூலை 1) முதல் ஜூலை 7ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

2 மாவட்டங்களில் மிக கனமழை

தமிழகத்தில் இன்று (ஜூலை 1) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப் பகுதிகள்

இன்று (ஜூலை 1) முதல் ஜூலை 5ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

இன்று முதல் ஜூலை 3ஆம் தேதி வரை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திரக்கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

இன்றும், நாளையும் மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு  அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

துரை வைகோவின் புதிய பாணி, ‘குடும்ப அரசியல்’!

”சிருங்கேரி மட ரகசியங்களை வெளியிடுவோம்” : அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *