orange alert delta districts

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை மையம்!

தமிழகம்

தமிழகத்தின் நான்கு டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (நவம்பர் 23) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “இன்று காலை 08.30 மணி அளவில் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 25 ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

23-11-2024 : தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24.11.2024:கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25-11-2024: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களில்  மிக கனமழையும்,

கடலூர், அரியலூர், சிவகங்கை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

23-11-2024 மற்றும் 24-11-2024: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

வயநாடு இடைத்தேர்தல் : ராகுலின் சாதனையை முறியடித்த பிரியங்கா

‘கலைஞர் 100 – வினாடி வினா’… கனிமொழிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

மனைவினா அப்படியே உருகிவிடுவார் நவ்ஜோத் சித்து… காரணம் அப்படி ஒரு சோகம்!

+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0