மெரினா கடலில் கலைஞருக்குப் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 10) தள்ளுபடி செய்தது.
சென்னை மெரினா கடற்கரையிலிருந்தும், சிறிது தொலைவு கடலுக்குள்ளும் கட்டுமானம் செய்யும் வகையில் முன்னாள் முதல்வர் கலைஞருக்குப் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் இதற்குத் தமிழக பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனினும் கடலில் பேனா அமைக்கக் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
பேனா நினைவுச் சின்ன திட்டத்தை ரத்து செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு கடந்த ஜூலை 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வழக்கு ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இம்மனு இன்று (ஜூலை 10) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது பொதுநல மனு அல்ல. இது போன்ற மனுவை ஏன் தாக்கல் செய்கிறீர்கள் என்று மனுதாரருக்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பிரியா
விரைவில் டாஸ்மாக் கடைகளில் ’கட்டிங்’ பாட்டில்: அமைச்சர் முத்துசாமி
பரங்கிமலை கொலை : குண்டர் சட்டம் ரத்து!