“ஆறுமுகசாமி சொன்ன காரணத்துக்காக மட்டும் ஆப்ரேஷன் செய்ய முடியாது” – மூத்த மருத்துவர் பதில்!

தமிழகம்

ஆறுமுகசாமி சுட்டிக்காட்டிய 4 காரணிகளை மட்டுமே வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை என்று மூத்த மருத்துவர் அமலோற்பவநாதன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அண்மையில் அரசிடம் அறிக்கை சமர்பித்தது.

ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, அவரது உறவினர் டாக்டர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்தது.

மேலும் டிசம்பர் 4-ந் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதாகவும், சசிகலா நினைந்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்றும் பல்வேறு தகவல்களை ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பான சர்ச்சை இன்னும் நீடித்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மூத்த மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்குள்ள வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கை பற்றி என்னிடம் கேட்டார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் கேட்டார்கள்.

ஜெயலலிதாவின் வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மில்லிகிராம், பி.பி. 160,கிரியேடின் 0.82,. அவரது உடற்பருமன், சர்க்கரை அளவு , ரத்த அழுத்தம் இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதுதான் என்னுடைய பாயிண்ட்.

ஒரு மருத்துவரை வைத்து உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்று நீங்களே ஆய்வின் அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தேன்” என்று ஆறுமுகசாமி கூறினார்.

 ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமியின் கருத்துக்கு இருதய ரத்தநாள அறுவை சிகிச்சை மருத்துவர் அமலோற்பவநாதன் பதிலளித்துள்ளார். ஆறுமுகசாமி சுட்டிக்காட்டிய 4 காரணிகளை மட்டுமே வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை.

நுரையீரல் செயல்பாடு, அறுவை சிகிச்சைக்கான தேவையை பரிசீலித்தே சிகிச்சையளிக்கப்படும், தொற்று பாதிப்பு, நோய் பாதிப்பின் தன்மையை பரிசீலனை செய்தே அறுவை சிகிச்சை நடந்தது என்று அமலோற்பவநாதன் தெரிவித்துள்ளார்.

கலை.ரா

ரபேல் வாட்ச் ரசீது அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி மீண்டும் கெடு!

குண்டர் தடுப்புச்சட்டம்: காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0