ஊட்டி கொடைக்கானல் : இ பாஸ் நடைமுறை நீட்டிப்பு!

Published On:

| By Kavi

ஊட்டி கொடைக்கானல் செல்வதற்கான இ பாஸ் நடைமுறை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம்,  ‘ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தருபவர்கள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள். தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி உத்தரவிட்டது.

ஜூன் 30 வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்த காலக்கெடு இன்னும் இரு தினங்களில் முடிவடையும் நிலையில் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 28) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் மையங்கள் தரப்பில் ஆய்வு செய்யப்படுகிறது. எனவே, இ-பாஸ் நடைமுறையை நீட்டிக்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் பரதசக்ரவர்த்தி, செப்டம்பர் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்: ஸ்டாலின் அறிவிப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share