கொடநாடு கொலை வழக்கு : நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படை போலீசார் மறு விசாரணை நடத்தினர்.

இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு இன்று (ஆகஸ்ட் 26) நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், உதயகுமார் உட்பட வழக்கில் கைதாகியுள்ள 10 பேரும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து.

கிறிஸ்டோபர் ஜெமா

டிஜிட்டல் திண்ணை: கொடநாடு- எடப்பாடிக்கு எதிரான ஆதாரம்: திணறும் போலீஸ்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0