ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (செப்டம்பர் 14) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவிற்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும்.
எந்த நீதிமன்றத்தாலும் தடை செய்ய முடியாத அளவிற்கு இந்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது தமிழக முதல்வரின் விருப்பம்.
அதற்காக விரைந்து செயல்பட்டு வருகிறோம். மிக விரைவில் அவசரச் சட்டம் கொண்டு வரப்படும். அதன் பிறகு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.
தமிழகத்தில் ஆனலைன் ரம்மியை கட்டாயம் தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மோனிஷா
ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் பயணமா? மெட்ரோ ரயில் சாதனை!