பிரபல சுற்றுலா தலங்களுக்கு ரேட்டிங் தரும் பணி என்ற பெயரில் கோவை இளைஞரிடமிருந்து 6 நாளில் ரூ. 32 லட்சம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அதை தடுக்க பல்வேறு முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சைபர் கிரைம் ஆசாமிகளுக்கு படித்த பட்டம் பெற்ற பட்டதாரிகளே பலிகடா ஆவது அதிர்ச்சியான விஷயம். ஆன்லைன் இன்வஸ்மெண்ட் , ஆன்லைன் ஜாப் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுக்கின்றனர்.
அந்த வகையில் டெலகிராமில் வந்த லிங்க்கை கிளிக் செய்த நபர் ஒருவர் பார்ட் டைம் ஜாப் செய்ய முற்பட்டு ஆறே நாளில் 32 லட்ச ரூபாயை பறிகொடுத்திருக்கின்றார்.
கோவை சிட்கோ பகுதியை சேர்ந்த இளைஞர் ரவி சங்கர். இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
பகுதிநேர வேலைக்கு ஆசைப்பட்ட அவருக்கு ஒரு டெலிகிராம் லிங்க் கண்ணில் பட்டிருக்கிறது.
உடனடியாக அந்த லிங்குக்குள் சென்று பார்த்தபோது சுற்றுலா தலங்களுக்கு ரேட்டிங் தரும் பணி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பெயரில் அந்த சைட் இருந்திருக்கின்றது.
அப்போது அந்த நிறுவனத்தை ரவிசங்கர் தொடர்பு கொண்டபோது, எதிர் தரப்பிலிருந்து தாங்கள் பெங்களூரில் இருந்து பேசுவதாகவும், இது கிளை அலுவலகம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த பணிக்கு முன்பணம் கட்டி ரேட்டிங் பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர்.
இதனை நம்பிய ஐடி இளைஞரும், நவம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு தொடர்ந்து முன் பணம் கட்டி பணியில் ஈடுபட்டிருக்கின்றார்.
அதாவது ஒரு சைட்டுக்கு ரூ. 10 ஆயிரம் பணம் கட்டுவதாக வைத்துக்கொண்டால், பணியை முடித்தவுடன் ரூ. 11 ஆயிரம் தருவார்கள். இதில் 1000 ரூபாய் லாபம்.
இப்படி ஆறு நாட்களில் மட்டும் ஏராளமான சைட்டுகளில் சுற்றுலா தலங்களுக்கு ரேட்டிங் தர 32 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைனில் செலுத்தியிருக்கின்றார். ஆனால் ஒரு பைசா கூட திரும்ப வரவில்லை.
இதனால், தான் ஆன்லைன் ஆசாமிகளால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிசங்கர், சிட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கலை.ரா
“ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ் கூடாரம்” – கி.வீரமணி குற்றச்சாட்டு!
சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி!