ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நீண்ட காலமாக ஆளுநர் மாளிகையில் கிடப்பிலிருந்தது.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்றைய தினமே ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் இந்த சட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் காணொலி மூலம் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முறையீடு செய்தார்.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
அவரது முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்து மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்றும் இல்லை என்றால் வழக்கமான பட்டியலில் தான் இடம்பெறும் என்றும் தெரிவித்தனர்.
பிரியா
‘அசுத்தமா இருக்கு, ஆக்சிஜன் இல்ல’ : அரசு மருத்துவமனையில் டிஎம்எஸ் ஆய்வு!
தொழுநோய் இல்லத்தில் ஆய்வு : குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின்