டெல்லி குடியரசு தின அணிவகுப்பு: ஆன்லைன் புக்கிங் ஆரம்பம்!

Published On:

| By Selvam

டெல்லியில் நடைபெறும் கண்கவர் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்க ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது.

இந்தியா தனது 75-வது குடியரசு தினத்தை 2025 ஜனவரி 26 அன்று கொண்டாட தயாராக உள்ளது.  குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சி மற்றும் மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டும் அணிவகுப்பு நிகழ்ச்சி கர்தவ்யா பாதையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஆன்லைனில் டிக்கெட் புக்கிங்  தொடங்கி உள்ளது. ஜனவரி 26 அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் ஜனவரி 28, 29 படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சிக்கும் புக்கிங் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் பிரத்யேக இணையதளத்தை அறிவித்துள்ளது.

அதன்படி www.aamantran.mod.gov.in என்ற மத்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ  போர்ட்டலுக்குச் செல்லவும்.

குடியரசு தின அணிவகுப்பு அல்லது படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி என்ற எந்த விழாவுக்கு டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்று செலக்ட் செய்யவும். உங்கள் அடையாள ஐ.டி மற்றும் மொபைல் எண் குறிப்பிடவும். அதன்பின் கட்டணத்தை செலுத்த வேண்டும். ரூ.20 மற்றும் ரூ.100 என ஒரு நபருக்கு டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்குச் செல்லும்போது புக்கிங் செய்த அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

பியூட்டி டிப்ஸ்: வெள்ளி கொலுசு… பராமரிப்பு அவசியம்!

ஹெல்த் டிப்ஸ்: வீடு தேடி வரும் தொற்று… வராமல் தடுப்பது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share