புதுச்சேரி மருத்துவக் கல்லூரி: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகம்

புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கான சென்டாக் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாணவர் சேர்க்கைக் குழு (சென்டாக்) நேற்று (ஜூலை 28) அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் 2024 தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு, அனைத்து இந்திய நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு சேர்க்கைக்காக சென்டாக் மூலம் விண்ணப்பிக்காலம் என ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக் குழு (சென்டாக்) அறிவித்துள்ளது.

இதன்படி, இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல் வாழை 2வது பாடல் ரிலீஸ் வரை!

நிதிப்பகிர்வு பிரச்சினைகள்: கூட்டாட்சிக் குடியரசு என்பது கூட்டுக்குடும்பமா? குடியிருப்பு வளாகமா?

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழம்- வேர்க்கடலை மில்க்‌ஷேக்

மாசக் கடைசி பரிதாபங்கள்: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *