இந்திய உணவு வகைகளைப் பொறுத்தவரை வெங்காயம் இல்லாமல் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மிக குறைவாகவே இருக்கும். சாம்பார், குழம்பு, பொரியல், சூப், பக்கோடா, பஜ்ஜி மற்றும் கிரேவி உணவுகள் என்று பல வகையில் பயன்படுத்தப்படும் வெங்காயத்தை வைத்து குழந்தைகளுக்குப் பிடித்த இந்த ரிங்க்ஸும் செய்து கொடுத்து அசத்தலாம்.
என்ன தேவை?
பெரிய வெங்காயம் – 2
சோள மாவு, மைதா – தலா அரை கப்
ஒரிகானோ பவுடர் – ஒரு டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்
கார்ன் ஃப்ளேக்ஸ் – அரை கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயத்தை வட்டமாக நறுக்கவும். பின்பு சோள மாவு, மைதா, ஒரிகானோ பவுடர், உப்பு, மஞ்சள்தூள், சில்லி ஃப்ளேக்ஸ் இவற்றுடன் தண்ணீர்விட்டுக் கலக்கவும். பிறகு வெங்காயத்தை இதில் தோய்த்து, நொறுக்கிய கார்ன் ஃப்ளேக்ஸில் புரட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ஆனியன் ரிங்க்ஸ் ரெடி.
எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது… என்ன செய்யலாம்?