பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் முடிந்து இன்று அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் செல்பவர்களுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்பது இல்லத்தரசிகளின் பெரும் கவலையாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எளிதாகச் செய்யக்கூடிய இந்த ஆனியன் சாதம் செய்யலாம். இந்த ஆனியன் சாதத்துடன் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ் போன்றவற்றைச் சேர்த்தால் வெஜிடபிள் சாதம் ரெடி. கீரையைச் சேர்த்தால் கீரை சாதம் தயார்.
என்ன தேவை?
சாதம் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
பூண்டு – ஒன்று டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெங்காயத்தை நீளவாக்கிலும், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு இவற்றைப் பொடியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கவும். இதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் சாதத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழையை சாதத்தின் மேல் தூவிவிடவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிக்பாஸ் சீசன் 8 : வெற்றி மேடையில் முத்துக்குமரன் செய்த சம்பவம்!
அமாவசை கணக்கு தெரியும் சார் : அப்டேட் குமாரு
சைஃப் அலிகான் மீது தாக்குதல்… பின்னணியில் வெளிநாட்டு சதி? நீதிமன்றம் உத்தரவு!
டிஜிட்டல் திண்ணை: மகளிர் உரிமைத் தொகை உயர்வு! ஸ்டாலின் mega மாஸ்டர் பிளான்!