இருப்பு வைத்தும் விலை கிடைக்காத சின்ன வெங்காயம்!

தமிழகம்

திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாய தொழிலும் இருக்கிறது. குறிப்பாக சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

இந்த நிலையில் சின்ன வெங்காயத்துக்குப் பயன்படுத்தப்படும் உரத்தின் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு மற்றும் உழவு கூலி உயர்வு இப்படி அனைத்தும் விலையேறியுள்ள நிலையில் சின்ன வெங்காயம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கிலோ 10 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த விலை விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லாததால் பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள்.

இந்தப் பட்டறை அமைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு இருப்பு வைத்தார்கள். ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை. மாறாக ஐந்து மாதங்களுக்கு முன் 10 டன்னாக இருந்த வெங்காயம் தற்போது மூன்று முதல் நான்கு டன் வரை எடை குறைந்தும் உள்ளது.

மேலும் இனியும் இருப்பு வைக்க முடியாத சூழ்நிலையில் பட்டறையில் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு செல்லும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

தற்போது சின்ன வெங்காயத்தின் விலை ஆட்களின் கூலிக்குக் கிடைக்கும் என்று நினைத்தால் எதுவும் மிஞ்சாது என்ற நிலைதான் உள்ளது. எனவே விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்வதுடன், சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *