ஓஎன்ஜிசி வாகனங்கள் சிறைபிடிப்பு: காரணம் என்ன?  

Published On:

| By Kavi

ONGC Vehicles captive by peoples

மன்னார்குடி அருகே செயல்பாடின்றி உள்ள ஓஎன்ஜிசி ஆழ்துளை எரிவாயு எண்ணெய் கிணறு உள்ள இடத்துக்கு ராமநாதபுரத்தில் இருந்து தளவாடப் பொருட்களுடன் வந்த எட்டு ஓஎன்ஜிசி கனரக வாகனங்களை பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் அமைப்பினர் சிறைபிடித்து வைத்துள்ளனர். ONGC Vehicles captive by peoples near Mannargudi

கோட்டூர் அடுத்துள்ள சேந்தமங்கலம் பெரியக்குடியில் ஓஎன்ஜிசி சார்பில் பூமிக்கடியிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக இரண்டு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதில், கடந்த 2013ஆம் ஆண்டு அதிக அழுத்தம் ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்படுவதாகக் கூறி பணி நிறுத்தப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக செயல்பாடின்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் செயல்பாடின்றி உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறுவதாக அப்பகுதியில் வசிப்பவர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.

இதை அடுத்து, காரைக்கால் ஓஎன்ஜிசி பொறியாளர்கள் குழு மற்றும் நாகை மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவினர் சேந்தமங்கலம் பெரியக்குடிக்கு வந்து செயல்படாத ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணற்றினை சோதனை செய்ததில்,

இதிலிருந்து எரிவாயு கசிவு ஏற்படவில்லை என்றும், அழுத்தம் காரணமாக காற்று வெளியேறுவதாக தெரிவித்ததை அடுத்து பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 11) ராமநாதபுரத்திலிருந்து சேந்தமங்கலம் பெரியக்குடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு பகுதிக்கு ஆழ்துளை அமைக்கும் தளவாட சாமான்களை ஏற்றிக்கொண்டு ஓஎன்ஜிசியின் எட்டு கனரக வாகனங்கள் வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்தின் மாநில துணைத் தலைவர் ரபீக் தலைமையில் அந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் பெரியக்குடி கடைவீதியில் அவற்றை மறித்து, வாகனங்கள் மேற்கொண்டு செல்லக் கூடாது என கூறி சிறைப்படுத்தினர்.

தகவலறிந்து, நிகழ்விடத்திற்கு வந்த விக்கிரபாண்டியம் காவல் உதவி ஆய்வாளர் சங்கரன்  வாகனங்களை சிறைபிடித்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பெரியக்குடி எரிவாயு எண்ணெய் கிணறு குறித்து ஓஎன்ஜிசி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், எண்ணெய் எடுக்கும் பணியினை தொடங்கினால் இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து வீடுகட்டி தந்த பின் பணியினை தொடரலாம் என தெரிவித்தனர்.

இதுபற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ONGC Vehicles captive by peoples near Mannargudi

எனினும், பேச்சு வார்த்தை  முடிவுக்கு பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படும் என சிறைப்பிடித்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன். கீர்த்தனா : டிரை ஃப்ரூட் லட்டு!

வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை சாத்தியமா?… உலக நாடுகளின் வேலை நேரங்களை பாருங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel