சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், லட்சக்கணக்கான உயிர்களை பறித்து உலக நாடுகளை அச்சுறுத்தியது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகியும் கொரோனா தொற்று மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த 42 வயது நபர் இன்று (ஜனவரி 4) உயிரிழந்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த அவர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்ததால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் ஒருவர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்: பிரேமலதாவால் நடிகர் சங்கத்தில் பிளவா?