ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலையாள மொழியில் பேசி தனது வாழ்த்துக்களை இன்று (ஆகஸ்ட் 29) தெரிவித்துள்ளார்.
மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கேரளா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இச்சூழலில் கேரள மக்களுக்கு பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் , பிரபலங்களும் தங்களது ஓணம் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
പരസ്പര സ്നേഹവും പൊരുത്തവും ഉള്ള ഒരു ജനതയായി മാറാനും എല്ലാവരെയും തുല്യരായി കാണാനും നമുക്ക് സാധിക്കട്ടെ.
പൂക്കളവും സദ്യയും സന്തോഷവും നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!#HappyOnam #HappyOnam2023 #Onam pic.twitter.com/Rt6sJo95PU
— M.K.Stalin (@mkstalin) August 29, 2023
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி தன்னுடைய வாழ்த்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்து பதிவில்,”மன்னன் மாவேலியின் ஆட்சி போன்று ஒற்றுமையும், சமத்துவமும் நிறைந்த ஆட்சி ஒன்றியத்தில் உருவாகும். என் பிரியமான மலையாள மக்களுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துகள்.”என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்