ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழிற்சாலையை நிறுவவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு சென்றார்.
இன்றுடன் முதல்வரின் 9 நாள் சுற்றுப்பயணம் நிறைபெறுகிறது. நாளை (மே 31) தமிழ்நாடு திரும்பவுள்ளார்.
இதனிடையே இன்று ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை நிறுவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம், தொழில்துறை ஆட்டோமேஷன், ஹெல்த்கேர், மின்னணு பாகங்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது, ஓம்ரான் நிறுவனம் சுமார் 120 நாடுகளுக்கு தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.
ஓம்ரான் கார்பரேஷனின் ஒரு பிரிவான ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம், டிஜிட்டல் ரத்த அழுத்த மானிட்டர்கள், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசர்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
மேலும், குறைந்த அதிர்வெண் வலி சிகிச்சை உபகரணங்கள், மின்னணு வெப்பமானிகள், உடல் அமைப்பு மானிட்டர்கள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் வகையில் இன்று மாலை டோக்கியோவில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்திற்கும் இடையே, 128 கோடி ரூபாய் முதலீட்டில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பிரியா
மதிமுகவிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி
‘வெறித்தனம்’ : கொண்டாடி தீர்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
நெல்லை: சினிமாவை மிஞ்சிய கொள்ளை சம்பவம்!