பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், இன்று மாலை முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (அக்டோபர் 24) மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது என்று தென்மாநில ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
அதற்கு மாறாக ’வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும்’ என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் அறிவித்தது.
இருவேறு சங்கங்களின் வேறுபட்ட அறிவிப்பால் ஆயுதபூஜைக்காக சொந்த ஊருக்கு சென்று, இன்று சென்னை திரும்புவதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தென்மாநில ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று காலை போக்குவரத்து இணை ஆணையர் முத்துவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணி முதல் நடைபெறுவதாக இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் படி, வாகனத்தை இடையில் நிறுத்தி சோதனை செய்யமாட்டோம் என்றும், விதிமீறல் புகாரில் அரசால் சிறைபிடிக்கப்பட்ட 120 பேருந்துகள் நாளை விடுவிக்கப்படும் என்றும் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தவறு செய்யும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என்று தென்மாநில ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.
அதன்படி மாநிலம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என்பதால் தற்போது பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நடிக்கும் ’அரிசி’!
தளபதி 68 பூஜை வீடியோ வெளியானது!