ஆம்னி பேருந்து கட்டணம்: ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்… பணத்தைத் திரும்பப்பெற்ற பயணிகள்!

Published On:

| By Prakash

‘ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அவர்களிடம் இருந்து ரூபாய் 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்” என ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வார விடுமுறை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை வருவதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பேட்டியளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “கூடுதல் கட்டணம் வசூலித்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்ற, ஆம்னி பேருந்துகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

இந்த நிலையில், அந்தக் குழுவினர் இன்று (ஆகஸ்ட் 12) மாலை சென்னையில் ஆம்னிப் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆய்வு நடத்திய அதிகாரிகள், ஒரு சில பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை நடத்துநரிடம் பெற்று மீண்டும் அதே பயணிகளிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், “ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் குறித்து மக்கள் தங்களது எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்.

அப்படி, கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டால், ரூபாய் 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தனர்.
ஜெ.பிரகாஷ்

ஈஷா யோகா மைய வழக்கு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel