கூடுதல் கட்டணப் புகாரைத் தடுக்க ஆம்னி பேருந்து சங்கத்தின் இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி http://www.aoboa.co.in/BusFare/index என்ற இணையதளத்தில் கட்டண விவரங்களை தெரிவித்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல கட்டணக் கொள்ளையை ஆரம்பித்துள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அப்சல் மற்றும் நிர்வாகி மாறன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பைசல், கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்து துறை மோசமான சூழலில் உள்ளது. மூன்றாயிரம் பேருந்துகள் இருந்த இடத்தில் இன்று 1500பேருந்துகள் தான் இயங்குகிறது.
மேலும் வரி, இன்சுரன்ஸ், ஜிஎஸ்டி,டோல்,டீசல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல கடுமையான சூழலில் இருக்கிறோம். ஆனால் 2016 முதல் நிர்ணயிக்கப்பட்ட விலை தான் இன்றும் உள்ளது. விலை ஏற்றவில்லை.
ஒரு சிலர் செய்யும் தவறால் பொதுவாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சாதாரண நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட குறைந்த கட்டணம் பெறப்படுகிறது.
ஆனால் பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பெறப்படும் போது அது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எங்களின் இணைய தளத்தில் உள்ளது.
ஆறு விதமான ஆம்னி பேருந்து வகைகள் உள்ளது. அதிகமாக கட்டணம் வாங்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து சங்கத்தின் சார்பில் நாங்களே போக்குவரத்து துறைக்கு புகார் தெரிவிக்கிறோம்.
அதே நேரத்தில் கூடுதல் கட்டணத்தையும் திருப்பி அளிக்க நடவடிக்கையும் எடுக்கிறோம்.
ஆம்னி பேருந்து தொழிலை நம்பி 3 லட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தவறான தகவல் பரப்பப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும்.
எந்த தொழிலாக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இருப்பதில்லை.
அவரவர் வசதிக்கு ஏற்ப தான் கட்டணத்தை முடிவு செய்து கொள்கின்றனர். அதற்கு அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
கலை.ரா
ஆம்னி பேருந்து கட்டணம்: முடிவே கிடையாதா? – புலம்பும் பயணிகள்!
டெண்டர் வழக்கில் வேலுமணி தாக்கல் செய்த மனு: நாளை விசாரணை!